குமரியில் திறக்கப்பட்டு ஒரே ஆண்டில் கண்ணாடி பாலத்தை 28 லட்சம் பேர் பார்வை

கன்னியாகுமரி: கண்ணியாகுமரி கடலில் உள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே ரூ.37 கோடியில் அமைக்கப்பட்ட கண்ணாடி பாலத்தை கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனால் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபதிற்கு சென்று பார்வையிட்ட பின் அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலம் வழியாக நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வந்தனர்.

இந்தப் பாலம் திறக்கப்பட்டு ஓராண்டில் சுமார் 28 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் கண்ணாடி இழை பாலம் வழியாக நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டுள்ளனர். கடந்த 2024ம் ஆண்டு சுமார் 20 லட்சம் பேர் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்ட நிலையில் 2025ம் ஆண்டு 28.50 லட்சத்திற்கும் பார்வையிட்டுள்ளனர்.

Related Stories: