தலைமை செயலாளர், டிஜிபி, உயர் அதிகாரிகள் முதல்வரை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று முகாம் அலுவலகத்தில், ஆங்கில புத்தாண்டையொட்டி தலைமைச் செயலாளர் முருகானந்தம், காவல்துறை தலைமை இயக்குநர் க.வெங்கடராமன், முதலமைச்சரின் செயலாளர்கள் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மேலும், அரசு கூடுதல் தலைமை செயலாளர்கள், அரசு முதன்மை செயலாளர்கள், அரசு செயலாளர்கள், துறை தலைவர்கள், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், காவல்துறை இயக்குநர்கள், கூடுதல் காவல்துறை இயக்குநர்கள், காவல்துறை தலைவர்கள் உள்ளிட்ட காவல்துறை உயர் அலுவலர்கள் புத்தாண்டையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

ஆங்கில புத்தாண்டையொட்டி தன்னை சந்தித்த அரசு உயர் அலுவலர்கள் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்களுக்கு முதல்வர் தனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

Related Stories: