நெல்லை: ஒன்றிய அரசின் வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நெல்லை மேலப்பாளையத்தில் இச்சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி அனைத்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மேலப்பாளையம் வணிகர் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மேலப்பாளையம் முக்கிய வீதிகள், சந்தை பகுதிகளில் கடைகள் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருந்தன. சுமார் 1500 கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்களும் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மேலப்பாளையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் வெளியூர் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இதன் காரணமாக மேலப்பாளையம் பகுதியில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்காக பொருட்கள் வாங்க முடியாமலும், போக்குவரத்து வசதி இன்றியும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
The post வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் கடைகள் அடைப்பு: ஆட்டோ, கார்களும் இயங்கவில்லை appeared first on Dinakaran.