ஸ்ரீரங்கம் கோயிலில் மயங்கி விழுந்து இங்கி. பெண் பலி

திருச்சி:இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் சைலேந்திர சவுலா மனைவி நிஷா சவுலா (60). இவர், தனது சகோதரர் பிரதீப் குமார் சவுத்ரியுடன் கடந்த சில தினங்களுக்கு முன் இந்தியாவுக்கு வந்தார். இந்நிலையில் ரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக இருவரும் சென்றனர். நேற்று காலை ரங்கா ரங்கா ராஜகோபுரம் அருகே நடந்து சென்ற போது நிஷா சவுலா திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை அவரது சகோதரர் மீட்டு ரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது ஏற்கனவே நிஷா சவுலா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: