இந்த யானை அப்பகுதியில் வசிக்கும் விமலன் என்பவரை கடந்த பிப். 7ம் தேதி தாக்கி கொன்றுள்ளது. நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் உடுமலையிலிருந்து மூணாறுக்கு பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்தை விரிகொம்பன் வழிமறித்தது. மேலும், பைக், கார் போன்ற வாகனங்களை ஆக்ரோஷமாக விரட்டியது. இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. காட்டுயானை வனப்பகுதிக்குள் சென்றவுடன் தப்பித்தோம், பிழைத்தோம் என வாகன ஓட்டிகள் வாகனத்தை எடுத்துக் கொண்டு விரைந்து சென்றனர்.
The post வாகனங்களை வழிமறிக்கும் விரிகொம்பன் காட்டுயானை: விழி பிதுங்கும் மூணாறு பகுதி மக்கள் appeared first on Dinakaran.
