சுவிட்ச் போட்டபோது மின்சாரம் பாய்ந்து மாணவர் சாவு

பெரம்பூர்: சென்னை கொளத்தூர் ஜிகேஎம். காலனி 16வது தெருவை சேர்ந்தவர் கௌரிசங்கர் பால். இவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். அங்குள்ள ஜவகர் நகரில் சிற்றுண்டி கடை நடத்தி வருகிறார். இவரது மகன் அஜய் பால் (17). இவர் அகரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு விடுமுறையில் இருந்து வந்தார். நேற்று நள்ளிரவு 12 மணியளவில் அஜய்பால் சிறுநீர் கழிப்பதற்காக எழுந்துவந்து டியூப் லைட் போடுவதற்காக சுவிட்ச் ஆன் செய்துள்ளார்.

அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட அவரது சத்தம்கேட்டு திடுக்கிட்ட பெற்றோர் எழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அஜய்பாலை உடனடியாக பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அஜய்பால் இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர். இதனால் பெற்றோர் கதறி அழுதனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் பெரவள்ளூர் போலீசார் வந்து அஜய் பாலின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சுவிட்ச் போட்டபோது மின்சாரம் பாய்ந்து மாணவர் சாவு appeared first on Dinakaran.

Related Stories: