பதவி உயர்வு கேட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்

சிவகங்கை, ஏப்.10: சிவகங்கை நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்க மாநில துணைத்தலைவர் வீரையா தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச்செயலர் சேதுராமன், மாவட்ட பொதுச்செயலர் முருகானந்தம், நிர்வாகிகள் உமாநாத், வேங்கையா, விஜயகுமார் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

தூய்மை பணியாளர்களுக்கு நிர்வாகம் சார்பில் நிரந்தர வைப்பு நிதி, புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு பிடித்தம் செய்த தொகையை சம்பந்தப்பட்ட துறையில் பணியாளர்களின் பெயரில் செலுத்தாமல் சுமார் ரூ.1.39 கோடி தொகை வேறு செலவினங்களுக்கு பயன்படுத்தியதை உடனடியாக செலுத்த வேண்டும்.

தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு அடிப்படை ஊதியமான ரூ.26ஆயிரம் வழங்க வேண்டும். மேற்பார்வையாளர் பணிக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்களை முறையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி நிரந்தர தூய்மை பணியாளர்கள் சுமார் 50 பேர் நகராட்சி அலுவலக வாயில் முன்பு பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

The post பதவி உயர்வு கேட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: