2025-26ம் நிதியாண்டுக்கான சட்டமன்ற தொகுதி மேம்பாட்டுக்காக ரூ.702 கோடி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசாணை வெளியீடு

சென்னை: 2025-26ம் நிதியாண்டுக்கான சட்டமன்ற தொகுதி மேம்பாட்டுக்காக ரூ.702 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. தமிழக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுக்கு ஒவ்வொரு வருடமும் ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்து வருகிறது.

இந்த தொகையில் எம்.எல்.ஏ.,க்கள் தங்களுடைய தொகுதியில் கட்டமைப்பு வசதிகளை செயல்படுத்துவார்கள். அரசு பள்ளி கட்டிடங்கள், சாலை வசதிகள், சாக்கடை வசதிகள், பேருந்து நிறுத்த வசதிகள், குடிநீர் தொட்டிகள், நூலகம், அங்கன்வாடி மையங்கள், சுகாதாரத் திட்டங்கள் உள்பட பல்வேறு அடிப்படை அத்தியாவசிய திட்டங்களை தனது தொகுதி மக்களுக்கு எம்எல்ஏக்கள் நிதியை விடுவித்து வேலை செய்ய அதிகாரிகளை அறிவுறுத்தலாம்.

எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி இல்லாமல் பல்வேறு பணிகளுக்கு அரசும் தனியாக நிதி ஒதுக்கி சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் 2025-26 நிதியாண்டுக்கான எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டுக்காக ரூ.702 ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

The post 2025-26ம் நிதியாண்டுக்கான சட்டமன்ற தொகுதி மேம்பாட்டுக்காக ரூ.702 கோடி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: