திருவொற்றியூர், ஏப்.5: திருவொற்றியூர் மேற்கு பகுதி, எர்ணாவூர், காந்திநகர் பேருந்து நிறுத்தத்திலிருந்து ஏராளமான பயணிகள் தினமும் மாநகர பேருந்தில் பயணிக்கின்றனர். இந்நிலையில், முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு, இந்த பேருந்து நிலையத்தை தனது சொந்த நிதியில் சீரமைக்க திமுக நிர்வாகி டாக்டர் எஸ்.அப்பு என்கிற சிவராமன் முன்வந்தார். இதன்படி ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாட்டில் முதல்முறையாக கழிப்பறையுடன் கூடிய நவீன பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டது.
இதற்கான பணிகள் முடிவடைந்ததையொட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி எஸ்.அப்பு என்கிற சிவராமன் தலைமையில் நடந்தது. கே.பி.சங்கர் எம்எல்ஏ கலந்துகொண்டு பேருந்து நிறுத்தத்தை திறந்து வைத்து ஏழை,எளிய மக்களுக்கு புடவை, அறுசுவை உணவு, தண்ணீர் பாட்டில் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திமுக நிர்வாகிகள் கே.பி.சொக்கலிங்கம், நிர்மல்தாஸ், செல்வம், மகேந்திரன், தேவராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
The post எர்ணாவூரில் ரூ.10 லட்சத்தில் கழிப்பறையுடன் கூடிய நவீன பேருந்து நிறுத்தம் appeared first on Dinakaran.