வானகரத்தில் புதிய காவல் நிலையம் திறப்பு

 

பூந்தமல்லி, ஏப்.12: சென்னை மதுரவாயல், வானகரம், திருவேற்காடு, போரூர் பகுதி மக்கள் பயன்படும் வகையில் வானகரத்தில் புதிய காவல் நிலையம் அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி அரசாணை வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவுப்படி வானகரம் அடுத்த நூம்பல் ஐ.சி.எல். குடியிருப்பு பிரதான சாலையில் வானகரம் புதிய காவல் நிலையம் அமைக்கப்பட்டது.

இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கூடுதல் ஆணையர் (வடக்கு) பர்வேஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய காவல் நிலையத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் கல்யாண், கோயம்பேடு துணை ஆணையர் அதிவீரபாண்டியன், உதவி ஆணையர்கள் பாலகிருஷ்ணபிரபு, செம்பேடுபாபு, இன்ஸ்பெகடர்கள் மகேஸ்வரி, பூபதிராஜ், கோபி மற்றும் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த வானகரம் புதிய காவல் நிலையத்தில் வானகரம், சிவபூதம், நூம்பல், அடையாளம்பட்டு, துண்டலம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கியுள்ளன. இந்த காவல் நிலைய எல்லைகளாக கிழக்கில் மதுரவாயல் பாலம், மேற்கில் பூந்தமல்லி சாலை மாநகரம் சந்திப்பு வடக்கில் திருவேற்காடு -அம்பத்தூர் சாலை, தெற்கில் எஸ்.ஆர்.எம்.சி. போரூர் சாலை வரை வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வானகரம் காவல் நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த காவல் நிலையத்தில் ஒரு ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர், ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர் உள்பட மொத்தம் 24 காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

The post வானகரத்தில் புதிய காவல் நிலையம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: