16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை: தாயின் 2வது கணவர் போக்சோவில் கைது

 

பெரம்பூர், ஏப்.5: வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் 39 வயது பெண். இவரது முதல் கணவர் இறந்துவிட்டார். இவர்களது 16 வயது மகள், 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 4 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரவணன் (38) என்பவரை, 39 வயது பெண் 2வது திருமணம் செய்துள்ளார். கடந்த சில நாட்களாக, இவரது 16 வயது மகளுக்கு, சரவணன் பாலியல் தொந்தரவை கொடுத்து வந்துள்ளார்.

இதுபற்றி அறிந்த இளம்பெண், தனது மகளிடம் தவறாக நடந்துகொள்வதை நிறுத்திக்கொள் என பலமுறை எச்சரித்தும் சரவணன் கேட்கவில்லையாம். இதுகுறித்து எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அந்த பெண் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது 16 வயது சிறுமிக்கு சரவணன் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் சரவணனை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post 16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை: தாயின் 2வது கணவர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Related Stories: