சென்னை, ஏப்.11: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை சற்று அதிகரித்து விற்கப்பட்டது. கோயம்பேடு பூ மார்க்கெட்டில் கடந்த 2 வாரங்களாக விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாள் இல்லாததால் அனைத்து பூக்களின் விலையும் சற்று குறைந்த நிலையில் வியாபாரம் செய்து வந்ததால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வேதனை அடைந்தனர். இந்நிலையில் நேற்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் சற்று உயர்ந்தது.
ஒரு கிலோ மல்லி ரூ.400லிருந்து ரூ.600க்கும், ஐஸ் மல்லி ரூ.200 இருந்து ரூ.300க்கும், முல்லை ரூ.400 இருந்து ரூ.750க்கும், ஜாதிமல்லி ரூ.450 இருந்து ரூ.750க்கும், கனகாம்பரம் ரூ. 300 இருந்து ரூ. 500க்கும், சாமந்தி ரூ.60 இருந்து ரூ. 180க்கும், சம்பங்கி ரூ.150 இருந்து ரூ.240க்கும், அரளி பூ ரூ.200 இருந்து ரூ.350க்கும் சாக்லேட் ரோஸ் ரூ.120 இருந்து ரூ.160க்கும் பன்னீர் ரோஸ் ரூ.80 இருந்து ரூ.120க்கும் விற்பனை செய்யப்பட்டது.
The post கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு appeared first on Dinakaran.