நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலில் ஆன்மிக புத்தக நிலையம்

 

ஆலந்தூர், ஏப்.5: இந்து அறநிலையத்துறை சார்பில் அரிய ஆன்மிக 216 சைவ வைணவ நூல்கள் மறுப்பு மதிப்பு செய்யப்பட்டுள்ளன. அவற்றை தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் பக்தர்கள் பெறுவதற்கு வசதியாக ஆன்மிக புத்தக விற்பனை நிலையம் தொடங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நங்கநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆதிவியாதிஹர பக்த ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று ஆன்மிக புத்தக விற்பனை நிலையம் தொடங்கப்பட்டது.

ஆலந்தூர் மண்டல குழு தலைவர் சந்திரன் புத்தக நிலையத்தை திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். ஆன்மிக நூல் விற்பனை நிலையத்தில் புராணங்கள், இதிகாசங்கள், பகவத்கீதை, ஸ்தோத்திரங்கள், சைவ சித்தாந்த நூல்கள், வைணவ நூல்கள், சிற்ப களஞ்சியம், ஓவிய கட்டடக்கலை, தேவாரப் பாடல்கள், ஆழ்வார்கள் பிரபந்தங்கள் ஆன்மிக தொடர்பான, 300 வகையான நுால்கள் விற்பனை செய்யப்படுகின்றன. குறைந்தபட்சம், ரூ.20 முதல் ரூ.900 வரை நூல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

The post நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலில் ஆன்மிக புத்தக நிலையம் appeared first on Dinakaran.

Related Stories: