சென்னை, ஏப். 4: விருகம்பாக்கம் மயானபூமியில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் வரும் 5ம் தேதி முதல் 25ம் தேதி வரை ஏ.வி.எம். மயானபூமியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:
சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், 128வது வார்டுக்குட்பட்ட விருகம்பாக்கம் மயான பூமியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால், வரும் 5ம் தேதி முதல் 25ம் தேதி வரை மேற்கண்ட மயானபூமி தற்காலிகமாக மூடப்படுகிறது. எனவே, பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் அருகிலுள்ள ஏ.வி.எம். மயான பூமியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பராமரிப்பு பணிக்காக விருகம்பாக்கம் மயானம் மூடல்: மாநகராட்சி அறிவிப்பு appeared first on Dinakaran.