எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம்

 

தண்டையார்பேட்டை, ஏப்.4: சிறுபான்மை மக்களை பாதிக்கும் விதமாக வக்பு வாரிய திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு நிறைவேற்றியது. இதனை கண்டிக்கும் விதமாக எஸ்டிபிஐ கட்சி சார்பில் நேற்று மதியம் கையில் கருப்பு பேட்ச் அணிந்து வடக்கு கடற்கரை சாலை வழியாக 50க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்றனர்.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை வடக்கு கடற்கரை போலீசார் கைது செய்து ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.

The post எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: