ஆலந்தூர், ஏப்.4: ஈக்காட்டுத்தாங்கலில் சிலர் திமிங்கல எச்சத்தை விற்க முயற்சி செய்வதாக, கிண்டி வனச்சரக அலுவலருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவரது தலைமையிலான சரக அதிகாரிகள் ஈக்காட்டுத்தாங்கலில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு ஓட்டல் அருகே சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.
அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவர்கள் வைத்திருந்த கைபையை சோதனை செய்தனர்.
அதில் திமிங்கலத்தின் எச்சம் இருப்பது கண்டறியப்பட்டது. இதன்யடுத்து 3 பேரையும் கிண்டி வனசரக அலுவலகத்துக்கு கொண்டு வந்து அவர்கள் வைத்திருந்த 4.161 கிலோ எடை கொண்ட திமிங்கல எச்சத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்திய போது இவர்கள் நன்மங்கலத்தை சேர்ந்த கணேசன் (63), மைலாப்பூரை சேர்ந்த ஆறுமுகம் (67), விழுப்புரத்தை சேர்ந்த சாந்தகுமார் (54) என்பதும், இந்த 3 பேரும் திமிங்கல எச்சத்தை விற்க முன்றதும் தெரியவந்தது.
மேலும் திமிங்கல எச்சத்தை கொடுத்து அனுப்பிய முக்கிய குற்றவாளியான ஸ்ரீதரனை வனசரக அதிகாரிகள் தேடி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட 3 பேரையும வனத்துறை அதிகாரிகள் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் படுத்தினர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட திமிங்கல எச்சத்தின் மதிப்பு ரூ.4 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post ஈக்காட்டுத்தாங்கலில் ரூ.4 கோடி திமிங்கல எச்சம் பறிமுதல்: மூவர் கைது appeared first on Dinakaran.