புதுச்சேரி, ஏப். 4: புதுச்சேரி மிஷன் வீதி செட்டிக்கோவில் என்று அழைக்கப்படும் காளத்தீஸ்வரர் கோயில் 22ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளான நேற்று காலை பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து, தினமும் காலை, மாலை, இரவு உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. ேநற்று மேளதாளம் முழங்க பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா நடைபெற்றது. இன்று காலை மற்றும் மாலையில் சந்திரசேகரர் சூரிய பிரபையில் சுவாமி வீதி புறப்பாடு நடக்கிறது.
9ம் நாள் விழாவாக 11ம் தேதி (வெள்ளி) காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் (12ம் தேதி) காலை நடராஜர் தேரடி உற்சவம், பவுர்ணமி திதி, பல்லக்கில் சந்திரசேகரர் கடல்தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. 16ம் தேதி காலை உற்சவ சாந்தி 108 சங்காபிஷேகம், பஞ்சமூர்த்திகள் ஆஸ்தானம் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
The post பிரமோற்சவத்தையொட்டி காளத்தீஸ்வரர் கோயிலில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா appeared first on Dinakaran.