பண்ருட்டி அருகே வீட்டில் பதுக்கிய 1500 கிலோ ரேஷன் அரிசி,10 சமையல் சிலிண்டர்கள் பறிமுதல்

 

பண்ருட்டி, ஏப். 9: வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 10 சமையல் சிலிண்டர்களை குடிமைப் பொருள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே எல்.என்.புரத்தில் உள்ள வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப்பொருள் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடலூர் குடிமைப்பொருள் பறக்கும் படையினர், பண்ருட்டி துணை தாசில்தார், பண்ருட்டி வட்ட விநியோக அலுவலர் (பொ) சிவகுமார் தலைமையில் அந்த பகுதிக்கு சென்று வீடு, வீடாக சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சாந்தி (51) என்பவரது வீட்டினுள் ஏராளமான பிளாஸ்டிக் சாக்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவைகளை சோதனை செய்தபோது, அதில் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. தகவல் அறிந்த கடலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் குமாரராஜா வந்து பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன்அரிசி மூட்டைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதையடுத்து குடிமைப் பொருள் குழுவினர் அந்த வீட்டில் மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 1500 கிலோ ரேஷன் அரிசி, 10 வீட்டு உபயோக காஸ் சிலிண்டர், துவரம் பருப்பு, மண்ணெண்ணெய் ஆகியவைகளை பறிமுதல் செய்து, கடலூரில் உள்ள அரசு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். இது குறித்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து சாந்தியை கைது செய்தனர்.

The post பண்ருட்டி அருகே வீட்டில் பதுக்கிய 1500 கிலோ ரேஷன் அரிசி,10 சமையல் சிலிண்டர்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: