கஞ்சா வழக்கில் தலைமறைவான வாலிபர் கைது: தப்பி செல்ல முயன்றபோது கால் முறிந்தது

புதுச்சேரி, ஏப். 3: புதுச்சேரி போதை பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் கடந்த மாதம் 27ம் தேதி இரவு புதுச்சேரி தற்காலிக பேருந்து நிலையத்தில் வாகனத்தில் ரோந்து வந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் போலீசாரை பார்த்தவுடன் திடீரென ஓட்டம் பிடித்தார். உடனே சந்தேகமடைந்த போலீசார், அந்த நபரை விரட்டி பிடித்து அவரது பையில் சோதனையிட்டபோது 4 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.போலீசார் விசாரணையில், அந்த நபர் புதுச்சேரி ஜி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த சித்தானந்தம் (20) என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி புதுவை மற்றும் விழுப்புரத்தில் விற்பனை செய்ய கொண்டு வந்தது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார், சித்தானந்தம் மீது வழக்குப்பதிந்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே இவ்வழக்கில் தலைமறைவான விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அசாருதீன் (27) என்பவர் புதுச்சேரி மூலகுளம் அம்மன் நகரில் பதுங்கி இருந்தபோது உருளையன்பேட்டை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது அவர் அங்கிருந்து தப்பி செல்ல மாடியில் இருந்து கீழே குதித்ததில் வலது கால் முறிந்தது. இதையடுத்து போலீசார் அவரை சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவரை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

The post கஞ்சா வழக்கில் தலைமறைவான வாலிபர் கைது: தப்பி செல்ல முயன்றபோது கால் முறிந்தது appeared first on Dinakaran.

Related Stories: