திருத்தணி தொகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனை தீவிரம்

திருத்தணி, மார்ச் 17: சட்டமன்ற தேர்தல் அட்டவணை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், தமிழ்நாடு உள்பட சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. திருத்தணி சட்டமன்ற தொகுதியில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை அதிகாரிகள் கடைபிடித்து கட்சி கொடிகள், பேனர்கள், அகற்றப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் சார்பில் அரசு மற்றும் தனியார் சுவர்களில் எழுதப்பட்ட விளம்பரங்கள், படங்கள் அழிக்கும் பணியில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

தமிழக முன்னாள் முதல்வர்கள் சிலைகளுக்கு துணியால் மூடப்பட்டுள்ளது. அனைத்து அரசு அலுவலகங்களில் முதலமைச்சர் படங்கள் அகற்றப்பட்டது. தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் பட்டுவாடா தடுக்கும் வகையில் துணை ராணுவப் படையினர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருத்தணி நகரின் அனைத்து பேனர்கள், சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள் அகற்றப்பட்டது. தமிழ்நாடு ஆந்திர எல்லைப் பகுதிகள் அமைந்துள்ள பொன்பாடி, பள்ளிப்பட்டு, பலிஜகண்டிகை உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் போலீசார் மற்றும் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: