திருவள்ளூர், மார்ச் 16: திருவள்ளூர் அடுத்த குன்னவளம் பகுதியை சேர்ந்தவர் குப்பன் (47). இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த தர்மா (25 ), மதன் (25), சாந்தி (50) ஆகிய 3 பேரும் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன்பகையை மனதில் வைத்துக் கொண்டு குப்பனை தகாத வார்த்தையால் பேசி தாக்கியுள்ளனர். மேலும் அவரது மனைவி மற்றும் மகளையும் அவர்கள் அடித்து உதைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து குப்பன் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் தர்மா, மதன், சாந்தி ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
