சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக திருவள்ளூருக்கு துணை ராணுவம் வருகை

திருவள்ளூர், மார்ச் 11: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, உத்தரபிரதேசத்தில் இருந்து துணை ராணுவ படையினர் சிறப்பு ரயில் மூலம் திருவள்ளூருக்கு வந்துள்ளனர். தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துவிடும் என்பதால், தமிழக தேர்தல் பணிக்கு உத்தரபிரதேசத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் சென்னை பெரம்பூருக்கு உதவி கமாண்டர் கார்த்திகேயன் தலைமையில் 90 துணை ராணுவ படையினர் வந்தடைந்தனர். தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆவண காப்பக துணை போலீஸ் டிஎஸ்பி ராஜபாண்டி, இன்ஸ்பெக்டர் கோமளா, சப்-இன்ஸ்பெக்டர் மாலா ஆகியோர் துணை ராணுவ படையினரை திருவள்ளூருக்கு அழைத்து வந்து, திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதூர், கனகவல்லிபுரம் கிராமத்தில் செயல்படும் காவலர் பயிற்சி பள்ளியில் தங்க வைத்துள்ளனர்.

Related Stories: