காட்டுப் பன்றிக்கு வைக்கப்பட்டது மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழப்பு

 

கும்மிடிப்பூண்டி, மார்ச் 16: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே உள்ள ஆலமரத்து காலனி பகுதியைச் சேர்ந்த டிராக்டர் டிரைவர் சசிகுமார் (26). இவர் நேற்று முன்தினம் இரவு எளாவூர் அடுத்த மெதிப்பாளையம் கிராமத்தில் உள்ள தனியார் வயலில் தர்பூசணி லோடு ஏற்றுவதற்காக டிராக்டரை ஓட்டிச் சென்றார். அங்கு டிராக்டரை நிறுத்தி விட்டு நடந்து செல்லும் போது, தர்பூசணி பாதுகாப்பிற்காக பன்றிகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின்வேலியை தொட்டதில் மின்சாரம் பாய்ந்து சசிகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சசிகுமார் உடலை மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து உறவினர்களும், கிராம மக்களும் சேர்ந்து உரிய நிவாரணம் மற்றும் நடவடிக்கை தேவை என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு சசிகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Related Stories: