தேர்தல் காரணமாக குறைதீர் கூட்டம் ரத்து மனுக்களை புகார் பொட்டியில் போட்டு சென்ற பொதுமக்கள்

திருவள்ளூர், மார்ச் 17: திருவள்ளூரில், தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்த நிலையில், மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், கலெக்டர் அலுவலகத்தில் மனுக்களை புகார் பொட்டியில் போட்டு விட்டு சென்றனர். இந்திய தேர்தல் ஆணையம், சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தியதை தொடர்ந்து, மக்கள் குறைதீர் கூட்டம் மற்றும் அரசு நலத்திட்டம் சார்ந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் பிரதாப் தலைமையில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தரும் பொதுமக்கள், தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை மனுக்களாக வழங்குவார்கள்.

இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தால், தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தியதை முன்னிட்டு. பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டதை அறியாத பலர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களிடம் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள தகவலை தெரிவித்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகளை தெரிவிக்க நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள மக்கள் குறை தீர்க்கும் வகையில் குறைதீர் மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. எனவே, மனுக்களை குறைதீர் மனு பெட்டியில் போட்டு செல்லுங்கள் என்று கூறினர். இதனைத்தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதியிகளிலிருந்து வருகை தந்த பொதுமக்கள், தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகள் சம்பந்தமான மனுக்களை மக்கள் குறைதீர் மனு பெட்டியில் போட்டுவிட்டு சென்றனர்.

Related Stories: