இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுமா? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி

புதுடெல்லி: இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுமா? என்று மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பினார். மக்களவையில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக நாடாளுமன்றக் குழுத் துணைத்தலைவருமான தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விகள்:
* பாக் ஜலசந்தியில் மீன்பிடி உரிமைகள் தொடர்பாக இலங்கை அரசுடன் புதிய ஒப்பந்தம் செய்வது பற்றி ஒன்றிய அரசால் எடுக்கப்பட்ட அல்லது முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
* கடந்த 11 ஆண்டுகளில், தமிழ்நாடு மீனவர்கள் 3,656 பேர் கைது செய்யப்பட்டு, 611 இயந்திரப் படகுகள் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதா? அப்படியெனில், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கும் ஒன்றிய அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
* கைதுகள் மற்றும் பறிமுதல்களால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு அல்லது ஆதரவு வழங்குவதற்கு ஏதேனும் கட்டமைப்பு உள்ளதா ? அவ்வாறு இருந்தால், அதன் விவரங்களைத் தெரியப்படுத்தவும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
* இந்திய மீனவர்களின், குறிப்பாக தமிழ்நாடு மீனவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காக இலங்கை அதிகாரிகளுடன் தூதரக அளவில் ஏதேனும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா?
இது தொடர்பாக இலங்கை அரசுடன் ​​ஒன்றிய அரசின் அமைச்சகம் உரையாடியுள்ளதா? உரையாடியிருந்தால், அதன் விவரங்களை தெரியப்படுத்தவும் எனக் கேள்வி எழுப்பினார்.

The post இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுமா? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: