கைதிகளுக்கு சலுகை கேரள சிறைத்துறை டிஐஜி சஸ்பெண்ட்

திருவனந்தபுரம்: கேரள சிறைத்துறை டிஐஜியாக இருப்பவர் வினோத்குமார். இவர் கைதிகளிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கி அவர்களுக்கு சட்டத்தை மீறி பரோல் உள்பட சலுகைகள் வழங்கி வருவதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இது தொடர்பாக நடத்திய விசாரணையில் டிஐஜி வினோத்குமார் கண்ணூர், திருச்சூர் உள்பட மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கி கூடுதல் நாட்கள் பரோல் உள்பட சலுகைகள் வழங்கியது தெரியவந்தது.

இவருடைய மனைவியின் வங்கிக்கணக்கில் மட்டும் கைதிகளிடமிருந்து ரூ. 45 லட்சத்திற்கும் மேல் பணம் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து டிஐஜி வினோத்குமார் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Related Stories: