பெங்களூரு ரவுடி கொலை வழக்கில் பாஜ எம்எல்ஏ 5வது குற்றவாளி

பெங்களூரு: பெங்களூருவில் கடந்த ஜூலை மாதம் ரவுடி சிவபிரகாஷ் என்ற பிக்லு ஷிவு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கின் குற்றப்பத்திரி கையை சிட்டி நீதிமன்றத்தில் எஸ்.ஐ.டி தாக்கல் செய்தது. குற்றப்பத்திரிகையில் பாஜ எம்.எல்.ஏ பைரதி பசவராஜ் உட்பட 18 பேரை குற்றவாளிகளாக சேர்த்திருக்கிறது. பாஜ எம்.எல்.ஏ பைரதி பசவராஜ் 5வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

ரவுடி ஜெகதீஷ் பத்மநாபா (45) முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் விமல் ராஜ், கிரண் கிருஷ்ணா, மதன், பிரதீப் உள்ளிட்டோர் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது. எம்.எல்.ஏ பைரதி பசவராஜின் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவர் இன்னும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் எஸ்.ஐ.டி தெரிவித்துள்ளது.

Related Stories: