மதுபான ஊழல் வழக்கு சட்டீஸ்கர் ஐஏஎஸ் அதிகாரி கைது

புதுடெல்லி: சட்டீஸ்கர் மாநிலத்தில் 2019 முதல் 2022 வரை நடந்த காங்கிரஸ் ஆட்சியில் ரூ.3500 கோடி அளவில் மதுபான ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரிதூது வருகிறது. இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா பாகேல் மற்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அனில் டுடேஜா, அரவிந்த் சிங், திரிலோக் சிங் தில்லான், அன்வர் தேபர், இந்திய தொலைத்தொடர்பு சேவை அதிகாரி அருண்பதி திரிபாதி,

சத்தீஸ்கரின் முன்னாள் கலால் துறை அமைச்சர் மற்றும் எம்எல்ஏ கவாசி லக்மா, சௌமியா சௌராசியா உட்பட பலரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இந்த நிலையில் சட்டீஸ்கர் கலால் ஆணையராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி நிரஞ்சன் தாஸ் என்பவரையும் அமலாக்கத்துறை நேற்று கைது செய்துள்ளது. மதுபான ஊழலில் இருந்து அவர் ரூ.18 கோடி குற்றச்செயல்களின் வருமானத்தை பெற்றதாக குற்றம்சாட்டி இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: