நாளந்தாவை புதுப்பித்ததற்காக ஜெய்சங்கரை புகழ்ந்து தள்ளிய சசிதரூர்

புதுடெல்லி: பீகாரில் நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தை அமைத்ததற்காகவும், நாட்டிற்காக ஆற்றிய பல அறியப்படாத பங்களிப்புக்காகவும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை, காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் வெகுவாக பாராட்டி உள்ளார். பீகாரின் ராஜ்கிர் பகுதியில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தில் ‘நாளந்தா இலக்கிய விழா’ கடந்த 21ம் தேதி தொடங்கி நாளை வரை நடக்கிறது. இதன் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் எம்பி சசிதரூர் பங்கேற்றார்.

இது குறித்து பாட்னாவில் அவர் அளித்த பேட்டியில், ‘‘நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தை பார்த்து நான் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். இந்த அற்புதமான சாதனைக்காக ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் வெளியுறவு அமைச்சகத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இது நமது நாட்டிற்கு வெளியுறவு அமைச்சகம் ஆற்றிய பல அறியப்படாத பங்களிப்புகளில் உயர் பாராட்டுக்கு தகுதியானது’’ என்றார். காங்கிரஸ் தலைமைக்கு நேர்மாறாக சசிதரூர் அடிக்கடி மோடி அரசை பாராட்டி வரும் நிலையில், ஜெய்சங்கரை அவர் புகழ்ந்துள்ளார்.

Related Stories: