நடிகை பலாத்கார வழக்கு திலீப் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு: கேரள அரசு முடிவு

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கடந்த 12ம் தேதி எர்ணாகுளம் மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில் முதல் 6 குற்றவாளிகளுக்கு 20 வருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. நடிகர் திலீப் உள்பட 4 பேர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று தீர்ப்பு வந்த அன்றே அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார். இதுதொடர்பாக சட்ட நிபுணர்களுடன் கேரள அரசு ஆலோசனை நடத்தி வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய கேரள அரசு தீர்மானித்துள்ளது. இதுகுறித்து நேற்று அதிகாரபூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Related Stories: