புதுடெல்லி: பஞ்சாபில் உள்ள தொழிற் சாலைக்காக சீனாவில் இருந்து சட்டவிரோதமாக 263 பேரை அழைத்து வர விசா வாங்கிக் கொடுத்ததாக கார்த்தி சிதம்பரம் மீது கடந்த 2022ம் ஆண்டு சிபிஐ பதிவு செய்தது. இந்த வழக்கு டெல்லி ரோஸ் அவனீவ் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி திக் வினய் சிங் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ‘‘கார்த்தி சிதம்பரம், அவரது ஆடிட்டர் பாஸ்கர் ராமன் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை வரும் ஜனவரி 16ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையடுத்து வழக்கு விசாரணைக்கு பிறகு பேசிய கார்த்தி சிதம்பரம், சட்ட செயல்முறைகள் பல வழிகளை அனுமதிக்கிறது. எனவே இந்த விவகாரத்தில் அவை அனைத்தும் உடனடியாக பின்பற்றப்படும் என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
