சென்னை: சென்னையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இரானி கொள்ளையன் சல்மானுக்கு ஏப்ரல் 9 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சல்மான் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் ஒரே நாளில் அடுத்தடுத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் சல்மான் கைது செய்யப்பட்டார். கைதான மற்றொரு கொள்ளையன் ஜாஃபர் குலாம் தரமணி ரயில் நிலையம் அருகே என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
The post இரானி கொள்ளையனுக்கு ஏப்.9 வரை நீதிமன்ற காவல் appeared first on Dinakaran.