இதுகுறித்து மெட்ரோ அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘’சிக்னல் சரியாக வேலை செய்யாததால் போக்குவரத்து போலீசார் வழியை திறக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளனர். இதுசம்பந்தமாக திருமங்கலம் போக்குவரத்து போலீசாரிடம் கேட்டபோது, ‘’ பொது வழியை உடனடியாக திறந்து வைக்கப்படும்’ என்று தெரிவித்தனர். ஆனால் இதன்பிறகு பல மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பொதுவழியை திறந்து வைக்காமல் உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது;
திருமங்கலம் 18வது மெயின் ரோடு பகுதியில் மெட்ரோ பணிகளுக்காக பொதுமக்கள் கடந்து செல்லும் வழி தடைசெய்யப்பட்டது. இதன்காரணமாக அவசரத்துக்கு மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை. குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்ல சிரமப்படுகிறோம். எனவே பொதுமக்கள் கடந்து செல்வதற்கு வழியை ஏற்படுத்தி தர வேண்டும். இதுபற்றி மெட்ரோ அதிகாரிகளிடம் கேட்டால் போக்குவரத்து போலீசார் சிக்னல் சரியாக வேலை செய்யவில்லை என்பதால் வழியை திறக்கக் கூடாது என்று தெரிவித்ததாக கூறுகின்றனர். வழியை திறக்குமாறு பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனிமேலாவது வழியை திறக்க வழிவகை செய்து தர வேண்டும்.
The post திருமங்கலம் 18வது மெயின் ரோட்டில் மெட்ரோ பணிகள் முடிந்த பிறகும் பொதுவழியை திறக்காததால் தவிப்பு appeared first on Dinakaran.