போடி, மார்ச் 30: போடி அருகே சங்கராபுரம் மேற்கு தெருவை சேர்ந்த ரெங்கராஜ் மகன் முகிலன்(23). இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சங்கராபுரம் சேர்ந்த அழகர் மகன் மனோஜ் என்பவர் கடந்த 6ம் தேதி முகிலனை வழி மறித்து மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். ஆனால் பணம் தர முடியாது என முகிலன் மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மறுபடியும் நேற்று முகிலனை வழிமறித்து மனோஜ் மதுகுடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் முகிலன் பணம் தரவில்லை. இதனால் கத்தியைக் காட்டி மனோஜ் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரில் போடி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post குடிக்க பணம் கேட்டு வாலிபருக்கு மிரட்டல் appeared first on Dinakaran.