ஆண்டிபட்டி, மார்ச் 30: மாவட்டத்தின் சில பகுதிகளில் மண் திருட்டு அதிகரித்துள்ளது. ஆறுகள், ஓடைகள், குளங்களில் மணல் திருட்டு அதிகளவில் நடைபெற்று வருகிறது. செங்கல் காளவாசலுக்கு, அவைகளின் தேவைக்காக ஒரு சில இடங்களில் மட்டும் குறிப்பிட்ட அளவு காளவாசல் மண் எடுத்துக் கொள்வதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் இந்த அனுமதியை பெற்றுக் கொண்டு பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பிட்ட அளவு இடத்திற்கு அனுமதி வாங்கிக் கொண்டு, குறிப்பிட்ட அளவு இடத்தை விட அதிக இடத்தை பயன்படுத்துவது. அனுமதி வாங்கிய இடத்தை தவிர்த்து மற்ற இடங்களை பயன்படுத்துவது உள்ளிட்ட சட்ட விரோத செயல்களை செய்து வருகின்றனர். இந்த மணல் திருட்டை தடுப்பதற்கு கனிம வளத்துறை அதிகாரிகளும், போலீசாரும் தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
The post மணல் திருட்டை தடுக்க தனிப்படை அவசியம் appeared first on Dinakaran.