மண்டபம்,மார்ச் 30: தமிழகம் முழுவதும் ஒன்றிய அரசை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக மண்டபம் மத்திய ஒன்றியம் உச்சிப்புளி பேருந்து நிறுத்தம் பகுதியில் திமுகவினர், ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எம்எல்ஏ காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி முன்னிலை வகித்தார். மண்டபம் மத்திய ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் வரவேற்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்திற்கு வழங்கக்கூடிய 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் ரூ.4034 கோடியை வழங்காமல் வஞ்சித்து வரும் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர். இதில் மண்டபம் ஒன்றிய முன்னாள் செயலாளர் ஏ.சி.ஜீவானந்தம், திமுக இளைஞரணி துணை செயலாளர் இன்பாரகு, ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், துணை பிரவின் தங்கம், மத்திய ஒன்றிய துணைச்செயலாளர் பெளசியாபானு மற்றும் மாநில, மாவட்டம், ஒன்றிய நிர்வாகிகள் உள்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
திருவாடானை நான்கு ரோடு சந்திப்பில், மத்திய ஒன்றியக் கழகத்தின் சார்பாக, ஒன்றியச் செயலாளர் சரவணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 600க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாது திரண்டிருந்த பெண்கள்,‘‘ஒன்றிய அரசே! 100 நாள் வேலைத் திட்ட ஊதியத்தை உடனே வழங்கு!”, ‘‘தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்காதே!”, ‘‘வேலைக்கான உரிமையை மதிக்கத் தவறாதே!” போன்ற கண்டனக் கோஷங்களை முழங்கினர்.
கமுதி கோட்டைமேட்டி ல் வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் தலைமையில் 2000க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மோடி அரசை எதிர்த்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அவைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதி பாரதிதாசன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், துணைத் தலைவர் சித்ராதேவி அய்யனார், பேரூர் செயலாளர் பாலமுருகன், மாவட்ட பிரதிநிதிகள் காசிலிங்கம் உட்பட எராளமானோர் கலந்து கொண்டனர்.
செங்கப்படையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் தலைமை தாங்கினார். 500 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இதில் ஒன்றிய துணைச் செயலாளர் தங்கப்பாண்டி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பெருநாழியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார்.
இதில் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். திருப்புல்லாணி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட, ஒன்றிய, நகர், கிளை செயலாளர்கள் 100 நாள் வேலைத் திட்ட பெண்கள் அனைவரும் பங்கேற்றனர். ஒன்றிய செயலாளர் நாகேஸ்வரன் நன்றி கூறினார். முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் உடைகுளத்தில் ஒன்றிய செயலாளர் பூபதி மணி தலைமை வகித்தார். இதில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் சத்தியேந்திரன், ஐ.டி.விங்க் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித் மணிகண்டன் கலந்து கொண்டனர். கடலாடி வடக்கு ஒன்றியம் ஆப்பனூரில் ஒன்றிய செயலாளர் ஆறுமுகவேல், சாயல்குடி மேற்கு ஒன்றிய ஜெயபாலன் எஸ்.தரைக்குடியிலும், சாயல்குடி கிழக்கு ஒன்றியம் குலாம் முகைதீன் மாரியூரிலும், முதுகுளத்தூர் மத்திய ஒன்றியம் கோவிந்தராஜ் கீரனூர் கிராமத்திலும், கமுதி மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் செங்கப்படை கிராமத்திலும் தலைமை வகித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
The post தமிழகத்தை வஞ்சித்து வரும் ஒன்றிய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.