ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் உபி மதுக் கடைகளில் அலை மோதும் கூட்டம்

புதுடெல்லி: உத்தர பிரதேச அரசின் புதிய மதுபான கொள்கை வரும் ஏப்ரல் 1 ம் தேதி முதல் அமலாக உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள மதுக் கடைகளில் இருக்கும் சரக்குகளை 31 ம் தேதிக்குள் விற்கும் முயற்சியில் கடை உரிமையாளர்கள் இறங்கி உள்ளனர். அதற்காக ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து மதுப்பிரியர்களை குஷிப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக ஒரு மதுபாட்டில் வாங்கினால்,ஒரு பீர் பாட்டில் இலவசம் என்ற அறிவிப்புக்கு மதுப்பிரியர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இதனால், கடந்த சில நாட்களாகவே மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. போலீசார் குவிக்கப்பட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தும் நிலை உள்ளது.

The post ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் உபி மதுக் கடைகளில் அலை மோதும் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: