சென்னை – திண்டிவனம் – விழுப்புரம், சென்னை – காஞ்சிபுரம் – வேலூர், கோவை -திருப்பூர் – ஈரோடு – சேலம் ஆகிய 3 வழித்தடங்களில் இந்த ஆய்வை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், மிக அதிவேக ரயில் போக்குவரத்து சேவையை உருவாக்கிட விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை தயார் செய்வதற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் வெளியிட்டுள்ளது. சென்னை செங்கல்பட்டு வழியாக திண்டிவனத்துக்கு 160 கி.மீ. வேகத்தில் 167 கி.மீ. தூரத்துக்கு ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் சென்னை-காஞ்சிபுரம் வழியாக வேலூருக்கு 160 கி.மீ.-ல் 140 கிலோ மீட்டர் தூரத்திற்கும், கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு வழியாக சேலத்திற்கு 185 கி.மீ. தூரத்திற்கும் ரயில் இயக்கப்பட உள்ளது. மணிக்கு அதிகபட்சம் 160 கி.மீ வேகத்தில் ரயில் செல்லும் வகையிலான, RRTS போக்குவரத்து டெல்லி – மீரட் இடையே செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post 3 வழித்தடங்களில் RRTS போக்குவரத்து சேவை – விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய டெண்டர் வெளியிட்டது மெட்ரோ நிறுவனம்!! appeared first on Dinakaran.