சென்னை: சென்னையில் புல்லட்டில் அதிவேகமாக சென்ற கல்லூரி மாணவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தான். கோடம்பாக்கத்தில் இருந்து உணவு சாப்பிட நண்பரை அழைத்துக் கொண்டு புல்லட்டில் சந்தோஷ்(19) சென்றுள்ளார். முன்னால் சென்ற பைக் மீது மோதி, மாநகராட்சி பூங்கா தடுப்புச்சுவரில் புல்லட் மோதி கீழே விழுந்ததில் சந்தோஷ் உயிரிழந்தான்.