சென்னை: மாதத்தின் கடைசிப் பணி நாளன்று ஒத்திசைவுப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுவதில்லை. இம்மாதத்தின் கடைசிப் பணிநாளான வரும் 29ம் தேதி சனிக்கிழமையாக அமைகிறது. அதனைத் தொடர்ந்து வரும் 30ம் தேதி தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் 31ம் தேதி ரம்ஜான் பண்டிகையினை முன்னிட்டு அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் விடுமுறை நாட்களாகும். எனவே, இம்மாதத்தின் கடைசி இரண்டு நாட்கள் நியாய விலைக் கடைகளுக்குப் பொது விடுமுறை தினங்களாக வருவதால், அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி வரும் 29ம் தேதி அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்பட்டு, வழக்கம் போல் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post வரும் 29ம் தேதி ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும் appeared first on Dinakaran.