அதனடிப்படையில் காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக சுதாகரன் ஆஜராகி உள்ளார். அவரிடம் சிபிசிஐடி தனிப்படை அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்காக வந்துள்ளனர். கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் பெறும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ள நிலையில் சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில் ஜெயலலிதா மறையும் வரை அந்த பகுதிக்கு சிலர் மட்டுமே சென்று வரக்கூடிய சுழலும் இருந்தது. அவ்வாறு செல்ல கூடிய நபர்களில் சுதாகரனும் உள்ளார்.
கோடநாடு பகுதிக்கு யார், யார் வந்துள்ளனர் , சென்றுள்ளனர். மேலும் கொலை சம்பவம் நடந்த நபருக்கும், இவர்களுக்குமான தொடர்பு குறித்த கேள்விகளை கேட்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் விசாரணைக்காக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்த நிலையில் சுதாகரன் ஆஜராகி உள்ளார். இந்த விசாரணை இன்று மாலை வரை நீடிக்க வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிந்த பிறகு தேவைப்பட்டால் மீண்டும் மற்றொரு நாளுக்கு சுதாகரனை அழைக்க வாய்ப்பு உள்ளதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் சுதாகரன் ஆஜர்..!! appeared first on Dinakaran.