திருவண்ணாமலை: அடகு கடையில் புகுந்து கொள்ளையடித்துக் கொண்டிருந்த திருடர்களை ரோந்து பணியின்போது சுற்றிவளைத்த காவலர்கள் இளங்கோவன் மற்றும் ராஜபாண்டி, மர்ம நபர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துணிச்சலாக பணியாற்றிய காவலர்கள் இருவருக்கும் காவல்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.1,000 வெகுமதி வழங்கி கௌரவித்தார்.