தமிழ்நாட்டுக்கான வானிலை மைய அறிக்கையை இந்தியிலும் வழங்க தொடங்கியுள்ளது ஒன்றிய அரசு என சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை மண்டல வானிலை மையம் தனது தினசரி வானிலை அறிக்கையை இனி இந்தியிலும் வெளியிடும். தமிழ்நாட்டின் பேரிடர் பாதிப்புக்கு நிதி அளிக்காத ஒன்றிய அரசு பேரிடர் முன்னறிவிப்பில் இந்தி திணிக்கிறது. பாஜகவுக்கு தமிழ்நாட்டு மக்களின் நலன் என்றுமே முக்கியமானதாக இருந்ததில்லை என்பதற்கு மற்றுமொரு உதாரணம் என்று கூறியுள்ளார்.
The post தமிழ்நாட்டுக்கான வானிலை மைய அறிக்கையை இந்தியிலும் வழங்க தொடங்கியுள்ளது ஒன்றிய அரசு: சு.வெங்கடேசன்! appeared first on Dinakaran.