ஜாக்டோ ஜியோ சார்பில் உண்ணாவிரத போராட்டம்

 

திருவண்ணாமலை, மார்ச் 24:திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ – ஜியோ சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நேற்று ஜாக்டோ ஜியோ சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.அதன்படி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பார்த்திபன், ஆசிரியர் மன்றம் மாநிலத் தலைவர் அண்ணாதுரை உள்பட பல்வேறு சங்கங்களில் நிர்வாகிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அப்போது, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்க நிர்வாகிகள் பேசினர்.மேலும், கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கா விட்டால் தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டம் நடைபெறும் என அப்போது தெரிவிக்கப்பட்டது.

The post ஜாக்டோ ஜியோ சார்பில் உண்ணாவிரத போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: