செய்யாறில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்

செய்யாறு, மார்ச் 23: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். காஞ்சிபுரம் தாலுக்கா புஞ்சைஅரசன்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த வினிதா என்ற இளம் பெண் காதல் திருமணம் செய்து கொண்ட கோளிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தீனதயாளன் என்பவருடன் செய்யாறு காவல் நிலையத்திற்கு வந்து தங்களுக்கு பாதுகாப்பு கோரி செய்யாறு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து புகார் மனு அளித்துள்ளார்.

புகார் மனுவினை பெற்றுக் கொண்ட செய்யாறு காவல் ஆய்வாளர் ஜீவராஜ்மணிகண்டன் தலைமையிலான போலீசார் வினிதாவினை அவரது காதலனையும் காஞ்சிபுரத்திற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்தனர். அதற்கு வினிதா காஞ்சிபுரம் காவல் நிலையத்திற்கு செல்ல மறுப்பு தெரிவித்து எங்களை அங்கே அழைத்துச் செல்ல வேண்டாம் எங்கள் உயிருக்கு அங்கு பாதுகாப்பு இல்லை என கூறி போலீசாரிடம் கண்ணீர் விட்டு அழுது கெஞ்சினார். அவருக்கு ஆதரவாக அவரின் வழக்கறிஞர் ஒருவரும் போலீசார் இடத்தில் வாதிட்டார். தொடர்ந்து காவல் ஆய்வாளர் வனிதாவிடம் உங்களை பாதுகாப்பாக காஞ்சிபுரம் காவல்நிலத்தில் ஒப்படைத்து விடுகிறேன் என கூறி காதல் ஜோடிகளை போலீஸ் ஜிப்பில் ஏற்றி காஞ்சிபுரம் காவல் நிலையத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

The post செய்யாறில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் appeared first on Dinakaran.

Related Stories: