திருவண்ணாமலை, மார்ச் 24:திருவண்ணாமலையில் நகர திமுக சார்பில் நடந்த முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில், பெண்கள் மட்டும் பங்கேற்ற இன்னிசை பட்டிமன்றம் நடைபெற்றது. திருவண்ணாமலை நகர திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாள் விழா அண்ணா சிலை அருகே நேற்று நடந்தது. நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் தலைமை தாங்கினார். மேயர் நிர்மலாவேல்மாறன், துணை மேயர் ராஜாங்கம், நகர நிர்வாகிகள் சி.சண்முகம், குட்டி க.புகழேந்தி, இல.குணசேகரன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். நகர பொருளாளர் சீனுவாசன் வரவேற்றார். விழாவில், மக்கள் முதல்வரின் திராவிட மாடல் ஆட்சி பெரிதும் துணைநிற்பது மாநிலத்தின் வளர்ச்சிக்கா, மகளிரின் மன மகிழ்ச்சிக்கா என்ற தலைப்பில் இன்னிசை பட்டிமன்றம் கல்பாக்கம் ரேவதி தலைமையில் நடந்தது. பட்டிமன்றத்தை தொடங்கி வைத்து, சட்டப்பேரவைத் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மருத்துவ அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் பேசினர்.
The post முதல்வர் பிறந்தநாள் விழாவில் பெண்கள் மட்டும் பங்கேற்ற இன்னிசை பட்டிமன்றம் appeared first on Dinakaran.