சுட்டெரிக்கும் வெயிலால் அணைகள், ஏரிகள், கிணறுகளின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிய தொடங்கியிருக்கிறது. திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்ளில் நீராதாரமாக திகழும் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் தற்போது 108 அடியாக குறைந்திருக்கிறது. அணையில் இருந்து தற்போது தென்பெண்ணை வழியாக வினாடிக்கு 900 கன அடியும், இடது மற்றும் வலதுபுற கால்வாய் வழியாக 520 கன அடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது. எனவே, அணையின் நீர்மட்டம் அடுத்த சில வாரங்களில் வெகுவாக குறையும். அதேபோல், குப்பனத்தம், செண்பகத்தோப்பு, மிருகண்டா அணைகளின் நீர்மட்டமும் குறைய தொடங்கியிருக்கிறது. அதேபோல், ஏரிகளின் மாவட்டம் என அழைக்கப்படும் திருவண்ணாமலையில், கோடை காலத்தின் தொடக்கத்திலேயே பெரும்பாலான ஏரிகளின் நீர்மட்டம் குறைந்திருக்கிறது.
The post ஏரி, அணைகளின் நீர்மட்டம் குறைந்தது appeared first on Dinakaran.