சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளத்தைச் சேர்ந்த காளீஸ்வரன் என்ற ரவுடி நள்ளிரவில் அவரது வீட்டு வாயிலில் வைத்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 4.52 படுகொலைகள் வீதம் 4 ஆண்டுகளில் மட்டும் 6597 படுகொலைகள் நடந்துள்ளன. எனவே சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: