தஞ்சாவூர் : 12ம் வகுப்பு பொது தேர்வு முடிந்து மகிழ்ச்சியுடன் வெளியே செல்லும் மாணவர்கள். தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள அரசர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2ம் வகுப்பு தேர்வு முடித்து நேற்று மதியம் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் வெளியே சென்றனர்.12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நேற்றுடன் பொதுத்தேர்வு முடிவடைந்தது.
இந்நிலையில், தேர்வுகள் முடியும்கடைசி நாள்அன்று உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாணவர்கள் பத்திரமாக வீட்டுக்கு செல்ல வேண்டும் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தேர்வு மையமாக செயல்படும் பள்ளிகளில் அப்பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் தேர்வு முடியும் நேரத்தில் வருகை புரிந்து, மாணவர்கள் அமைதியாக வெளியே செல்ல உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்திரவிடப்பட்டுள்ளது.தஞ்சை கல்வி மாவட்டத்தில் 70 மையங்களில் 140 பள்ளிகளை சேர்ந்த 8 ஆயிரத்து 616 மாணவர்களும், 7 ஆயிரத்து 929 மாணவிகள் என மொத்தம் 16 ஆயிரத்து 545 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 40 மையங்களில் 89 பள்ளிகளை சேர்ந்த 6 ஆயிரத்து 42 மாணவர்களும், 5 ஆயிரத்து 80 மாணவிகளும் என மொத்தம் 11 ஆயிரத்து 122 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதுகின்றனர்.
தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 110 மையங்களில் 229 பள்ளிகளை சேர்ந்த 14 ஆயிரத்து 658 மாணவர்களும், 13 ஆயிரத்து 9 மாணவிகளும் என 27 ஆயிரத்து 667 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இந்த நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு நேற்று தேர்வு முடிந்த நிலையில் அனைவரும் மகிழ்ச்சியுடன் செல்வி எடுத்து மகிழ்ந்தனர்.
The post பிளஸ் 2 தேர்வு முடிவடைந்தது செல்பி எடுத்து மாணவர்கள் உற்சாகம் appeared first on Dinakaran.