மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் தண்டனை தொகுதி மறுசீரமைப்பு. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு கூடாது. இதையும் பாருங்க நாட்டின் வளர்ச்சிக்கு உதவியதற்கு தண்டனையா? தமிழகம், பஞ்சாப் மட்டுமல்ல, மக்கள் தொகையை கட்டுப்படுத்திய அனைத்து மாநிலங்களும் பாதிப்பை சந்திக்கும்.
தாங்கள் வெற்றி பெரும் மாநிலங்களின் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதும், தோல்வியைச் சந்திக்கும் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைப்பதே பாஜவின் நோக்கமாகும். அதன்படி பஞ்சாப் மாநிலத்தின் மக்களவை தொகுதிகளும் குறைக்கப்படும். ஏனெனில் பாஜ பஞ்சாப்பில் வெற்றி பெறாது. இந்த தொகுதி மறுவரையறையால் இந்தி பேசும் மாநிலங்கள் மட்டுமே ஆதாயம் பெறும். தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு 100 சதவீதம் ஒத்துழைப்பு வழங்குவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
The post பஞ்சாப் முதல்வர் பகவந்த்சிங் மான் குற்றச்சாட்டு பா.ஜ தோல்வியுறும் மாநிலங்களின் இடங்களை குறைக்க விரும்புகிறது appeared first on Dinakaran.